
தேவை ஏற்பட்டால் மாத்திரமே மின்விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் இன்று முதல் திட்டமிடப்பட்ட மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைய 1 முதல் 2 மணித்தியாலங்கள் வரை திட்டமிடப்பட்ட மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பகல் வேளைகளில் குறித்த மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் சாத்தியம்.
அதிக தேவை காணப்படும் இரவு வேளையில் குறித்த மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், தேவை ஏற்பட்டால் மாத்திரமே மின்விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கான காலப்பகுதி தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எண்ணெய் கொள்வனவில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு ஆகியவற்றின் காரணமாகவே மின்விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.