தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவேந்தல் இன்று – யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை சம்பவத்தின் 47 ஆவது நினைவுதினம் , இன்று காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக அமைந்துள்ள நினைவுத் தூபியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

1974ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு, அங்கு பொலிஸாரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது.

குறித்த கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்றுள்ளது.இதன் போது மலர் அஞ்சலி செலுத்தி,மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.

மேலும் தமிழ் தேசிய கட்சியின் எம்.கெ சிவாஜிலிங்கம் ,ஈ.பி.ஆர்.எல்.எப் இன் சுரேஷ் பிரேமச் சந்திரன்,யாழ் மாநகர சபை முதல்வர் வி,மணிவண்ணன் ,அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *