நாட்டுக்குத் தேவையான தடுப்பூசி கொள்வனவு தொடர்பில் வெளியான தகவல்!

நாட்டுக்குத் தேவையான கோவிட் தடுப்பூசி கொள்வனவு நடவடிக்கைகள் பூரணப்படுத்தப்பட்டுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டுக்குத் தேவையான 48 மில்லியன் கோவிட் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana ) தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 29ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி கொள்வனவு நடவடிக்கைகள் நேற்றைய தினம் பூர்த்தியாகியுள்ளது.

2.8 மில்லியன் அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசிகள், 1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகள், 330,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகள், 26 மில்லின் சைனோபார்ம் தடுப்பூசிகள், 17.5 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் என்பன இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி ஏற்றுகைக்காக 14 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி கொள்வனவிற்கான கொடுப்பனவுகள் உலக வங்கியின் ஊடாக மேற்கொள்ளப்பட்டது எனவும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *