
மண்ணில் மாண்ட வீரர்கள் எல்லாம் திரும்ப வருவார்கள் என மூத்த சட்டத்தரணி நவரட்ணம் கரிகாலன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று காலை இடம்பெற்ற தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினனவு தின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒளயார் கூறியிருக்கிறார் ஆண்டாண்டு மீண்டும் அழுது புரண்டாலும் மாண்டார் திரும்பி வருவாரோ என்று.மாண்டவர்கள் அக்கினி தீ போல மீண்டு வருவார்கள் .குட்டி மணி,தங்கதுறை ,பிரபாகரன் போன்றோர் .அவர்கள் மீண்டும் பிறப்பார்கள்.
அன்று இஸ்ரயேலியர்கள் நினைக்கவில்லை,ஜெருசலோம் போவோமென்று.அது போன்று நாம் நாமும் நம்பிக்கையுடன் இருப்போம்.
இந்த புனித நினைவு தினங்களை ,உணர்வுகளை நாம் அடுத்த சந்ததியினருக்கு கடத்துவோம்.
நாளை வரும் சந்ததி இந்த நினைவு தினங்களை கையிலே எடுக்கும்,முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றார்.
அச்சுவேலியில் பொலிசாரின் அசமந்த போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்