
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள,சீன வெளிவிவாகர அமைச்சர் வாங் யீ இன் பயணம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன.
சீன வெளிவிவகார அமைச்சர் நேற்று இரவு கொழும்பு துறைமுக நகருக்கு சென்றுள்ளதுடன்,சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நினைவு தினத்திலும் கலந்து கொண்டுள்ளார்.
இதன் போது நிகழ்வின் மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனர் மற்றும்,65 ஆவது ஆண்டு நினைவு தினத்தில் வெளியிடப்பட்ட ரீசேட் ஆகியவற்றில் சிங்களம் ,தமிழ் மொழிகள் புறக்கணிக்கப்பட்டு சீன மற்றும் ஆங்கில மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நாடளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் “எங்கே எங்கள் இரண்டு ஆட்சி/தேசிய மொழிகள்? அல்லது துறைமுக நகர் முழுமையாக சீனாவின் சொத்தா? எமது 65 நட்புறவை இப்படிதான் கொண்டாடுவதா? யாருக்கு பொறுப்பு, அக்கறை..? ஒருவருக்கும் வெட்கமில்லை..! தேசத்திடம் மன்னிப்பு கோருங்கள்..! ” என தந்து ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ள்ளார்.