
இன்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதிவரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் மிதமானது முதல் கன மழை கிடைக்க வாய்ப்புள்ளது என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கடும் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 04 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் பரவலாக மழை வீழ்ச்சி கிடைக்கும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.