
கொழும்பு – வெள்ளவத்தை கடலில் தலையில்லா சடலமொன்று கரையொதுங்கியதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இந்த சடலம் இன்று காலை கரையொதுங்கியுள்ளது.
தலை இல்லாது காணப்படும் இந்த சடலம், முழுமையாக உருகுலைந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
ஆண்ணொருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதுடன், குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.