கொழும்பு நோக்கி வரும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

பஸ் போக்குவரத்து பிரச்சினை காரணமாக சில தனியார் பஸ் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

பாணந்துறை – மொரட்டுவையில் இருந்து கொழும்பு நோக்கி பேருந்துகளை இயக்கும் நீண்ட தூர பேருந்து சாரதிகளுக்கும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக மேற்படி பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி பாணந்துறை – கொழும்பு கோட்டை (100) , மொறட்டுவ − கொழும்பு கோட்டை (101) மற்றும் பாணந்துறை − நுகேகொட (183) ஆகிய மார்க்கங்களில் சேவையில் ஈடுபடும் பஸ் ஊழியர்களே இவ்வாறு பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று முன்தினம்(09) இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பேருந்து ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *