பி.டி.ஐ. திருடர்களின் கட்சி: பி.டி.எம். தலைவர் சாடல்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) ஒரு ‘திருடர்களின் கட்சி’ எனவும், அனைத்து அரசியல்வாதிகளின் தவறுகளும் இணைத்தாலும் அது இம்ரான் கானின் ஊழல்களை விஞ்சிவிட முடியாது எனவும், அந்நாட்டின் எதிர்க்கட்சி கூட்டணியான பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் (பிடிஎம்) தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தேர்தல் ஆணையகத்தின் ஆய்வுக் குழுவின் அறிக்கையின்படி, பி.டி.ஐ மில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு நிதியை மறைத்துள்ளது என ஃபஸ்லுர் தெரிவித்ததாக ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.

பாக் சர்ஜமீன் கட்சி தலைவர் முஸ்தபா கமலுடன் இணைந்து நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஃபஸ்லுர், ‘ஊழல் மற்றும் தேர்தல் ஆணையகத்திடமிருந்து மில்லியன் கணக்கான வெளிநாட்டு நிதிகளை  பிரதமர் இம்ரான் மறைத்துள்ளார் என பகிரங்கமாகவே சாடியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல்கள் சட்டமியற்றுவது பற்றிய ஊகங்கள் பரப்பப்படுகின்றன, ஆனால் நாடு அரசியலமைப்பின்படி இயங்குவது மட்டுமல்லாமல், நான்கு மாகாணங்களிலும் முடிவுகள் எடுக்கப்பட்டு அதற்கேற்பவே தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு நிதியுதவி குறித்த ஆய்வுக் குழுவின் அறிக்கையாது,  பி.டி.ஐ. பற்றிய அனைத்து விடயங்களையும் வெளியிட்டுள்ளது.

ஆகவே ‘இம்ரான் கான் பற்றி நான் ஏற்கனவே கணித்தது உண்மையாகி வருகிறது’ என்று அவர் மேலும் கூறினார்.

பிரதமர் இம்ரான் எப்போதும் சிறந்த சூழ்நிலைகளைப் பற்றி பேசும் போது, அவை அவரது நடைமுறை வாழ்க்கை அவரது இலட்சிய வார்த்தைகளுக்கு எதிராக இருந்தது. தற்போது அது வெளிப்படையவே உணரப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *