
ஆயுதங்கள், போதைப்பொருட்களுடன் சிங்கப்பூர் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
குறித்த நபர் தங்கியிருந்த தலங்கம பெலவத்தையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இவ்வாறு ஆயுதங்களும், போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஹாஷ் ஒயில், 50 கிராம் கேரள கஞ்சா, 3 பிளாஸ்டிக் கேன்கள், 02 மின் தராசுகள், சில கருவிகள், செல்லுபடியாகாத ஜெர்மன் துப்பாக்கி, இரும்புத் தட்டுகள், 181 ஏர் பிஸ்டலுக்கான கருப்பு வில், 21 அம்புகள் மற்றும் ஒரு சிறிய வில் ஆகியன கைப்பற்றப்பட்ட பொருட்களில் அடங்குவதாக போலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குறித்த நபரை தலங்கம பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.