
மலையகத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் இரண்டு ஏக்கர் காடு எரிந்து நாசமாகியதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் நோட்டன் பிரதான வீதியின் காசல்ரீ நீர்தேக்க கரையோர பகுதியான சமர்வில் பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 02 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
காசல்ரீ நீர்தேக்கத்தில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், இனந்தெரியாத விஷமிகளால் இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார். தெரிவித்துள்ளனர்