
தமிழ் மக்களுக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வை வழங்குமாறு இலங்கை அரசுக்கு, தென்கொரியா அரசு ஆலோசனை வழங்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்தார்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள தென்கொரிய சபாநாயகர் நேற்று நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார். சபை நடவடிக்கைகளையும் கண்காணித்தார்.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த தென்கொரிய சபாநாயகரை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் சார்பில் வரவேற்பதாகவும், அம்மக்களின் சார்பில் வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் சார்ள்ஸ் எம்.பி. குறிப்பிட்டார்.
அத்துடன், இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் தென்கொரிய அரசும் தலையிட வேண்டும்.
இலங்கையின் அபிவிருத்திக்கு தென்கொரியா ஒத்துழைப்புகளை வழங்கிவருகின்றது. பலர் அந்நாட்டில் வேலை செய்கின்றனர்.
எனவே, இலங்கையில் அனைத்து இன மக்களும் சம உரிமையுடன் வாழ்வதற்கும், தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதற்கும் இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்குமாறு தென்கொரிய சபாநாயகரிடம் கேட்டுக்கொள்கின்றேன். – எனவும் தமது உரையில் சார்ள்ஸ் எம்.பி. தெரிவித்தார்.
வவுனியாவில் 35 பரீட்சை மத்திய நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை!