
மூதூர் 64 ஆம் கட்டை மலையடி பிள்ளையார் ஆலயத்தின் நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு வழியுறுத்தி மூதூர் பிரதேச இந்து குருமார் சங்க தலைவர் சிவஸ்ரீ இ.பாஸ்கரன் குருக்கல் மூதூர் பிரதேச செயலாளரினால் நேற்று கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கத்தினர் 64 ஆம் கட்டை மலையடி பிள்ளையார் ஆலய முன்றலில் இன்று காலை ஒன்றுகூடி கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இவ்விடயம் தொடர்பாக மூதூர் பிரதேச இந்து குருமார் சங்க தலைவர் சிவஸ்ரீ இ.பாஸ்கரன் குருக்கள் கருத்து தெரிவிக்கையில் –
திருகோமலை மாவட்ட செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மூதூர் பிரதேச செயலாளரினால் எமக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இக்கடிதத்தில் மூதூர் 64 ஆம் கட்டை பகுதியை பூஜா பூமி தொடர்பில் அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்த உள்ளமையால் ஆலய நிர்மாண வேலைகளை இடைநிறுத்துமாறும், எனினும் மலையடி பிள்ளையார் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் நடத்த முடியுமெனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை மீறி புனர் நிர்மானப்பணிகள் இடம்பெறுமாக இருந்தால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாலயமானது சுமார் 200 வருடங்களுக்கு முற்பட்ட கால வரலாற்றைக் கொண்ட ஆலயமாகும்.
எனினும் இவ்வாலய நிர்மாண பணிகளை நிறுத்துமாறு அரச அதிகாரிகள் எமக்கு அறிவுறுத்தல் வழங்குவதானது கவலையளிக்கின்றது.
இருப்பினும் குறித்த ஆலய நிர்மாண வேலைகளை சட்டரீதியாகவும், முக்கியஸ்தர்களின் ஆலோசனையின் அடிப்படையிலும் அனுகி மூதூர் 64 ஆம் கட்டை மலையடி பிள்ளையார் ஆலயத்தின் நிர்மாணப் பணிகளை மேற்கொள்வோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதேவேளை, மலையடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள இடத்திலோ அல்லது அதனை சுற்றியுள்ள வளாகத்திலோ தொல்பொருள் திணைக்கள காணி என்கின்ற எந்த அடையாளங்களும் இடப்படாத நிலையில் எமது ஆலய நிர்மாண பணிகளை மேற்கொள்ளும் வேலையில் பூஜா பூமிக்காக அதிகாரிகள் ஆய்வு செய்யப் போகின்றார்கள் என்று சொல்லி ஆலய நிர்மாண வேலைகளை இடை நிறுத்துவதானது எமக்கு வேதனை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அங்கொட தேசிய தொற்று நோய்களுக்கான நிறுவகத்திற்கு மாற்றப்பட்டார் சரத் வீரசேகர!