அடுத்த மாதம் 12-13 திகதிகளில் ஐ.பி.எல். மெகா ஏலம்

2022 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஜ.பி.எல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்ற நிலையில், தொடரை மார்ச் மாதத்தில் நடத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த தொடரை இந்தியாவில் நடத்துவதானால் மும்பை நகரத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, இரண்டாவதாக அஹமதாபாத் நகரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

மார்ச் மாதத்திற்குள் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் தென்னாபிரிக்கா அல்லது ஐக்கிய அரபு இராச்சியத்தில், போட்டியை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இருப்பினும் ஐ.பி.எல். போட்டிகள் தொடர்பிலான இறுதி தீர்மானம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *