புத்தளம் மஹ்மூத் ஆலிம் ப்ளேஸ் வீதிக்கு புதிய பெயர் பலகை

புத்தளம் நகரில் உள்ள “மஹ்மூத் ஆலிம் ப்ளேஸ்” வீதிக்கு இடப்பட்ட புதிய பெயர்ப்பலகை நேற்று (22) மாலை திறந்து வைக்கப்பட்டது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் கிளை தலைவரும், புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரி அதிபருமான அஷ்ஷெய்ஹ் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் ஹஸரத் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த பெயர் பலகையை திறந்து வைத்தார்.

இதன்போது, புத்தளம் நகரசபை உறுப்பினர்களான ஆரிப் சிஹான், ரனீஸ் பதூர்தீன் , மௌலவி ஷாபி ஸஹ்தி உட்பட உலமாக்கள், கல்லூரியின் மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

புத்தளம் நகரசபை உறுப்பினர் ஆரிப் சிஹானின் வேண்டுகோளின் பேரில் காஸிமிய்யா அரபு கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் அனுசரனையில் குறித்த பெயர்ப்பலகை நிர்மாணிக்கப்பட்டது.

மன்னார் நெடுஞ்சாலையின் காஸிமிய்யா மத்ரஸா உள்ளக வீதியில் ஆரம்பித்து 5ம் குறுக்கை ஊடறுத்துச் சென்று கடற்கரை லைட் ஹவுஸ் வரையிலான பகுதிகளே மஹ்மூத் ஆலிம் பிளேஸ் ஆகும்.

“பெரிய ஹஸரத்” என்று புத்தளம் வாழ் முஸ்லிம்களால் என்றும் கௌரவமாக அழைக்கப்படும் காஸிமிய்யா கலாசாலையின் முன்னாள் அதிபராக சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக கடமையாற்றிய மஹ்மூத் அப்துல் மஜீத் இனமதபேதமின்றி சேவையாற்றி அனைத்து சமூகத்தினதும் நன் மதிப்பைப் பெற்றதை இதன்போது நினைவு கூறப்பட்டன.

மேலும் புத்தளம் நகரபிதா காஸிமிய்யா அரபுக் கல்லூரிக்கும் விஜயம் செய்து கல்லூரி நிர்வாகத்தினரோடு கலந்துரையாடியதுடன், அங்கு காணப்படும் குறைபாடுகளையும் கேட்றிந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *