
கடந்த 2006 ஆம் ஆண்டு திருமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 16வது ஞாபகார்த்த தின நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.
அதன்படி, மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் அமைந்துள்ள இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் ஞாபகார்த்த நினைவுத் தூபியில் நாளை (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு, நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு ஊடக அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நடைபெறும், இந்த ஞாபகார்த்த நிகழ்விற்கு ஊடகவியலாளர்கள், சமூக நலன் விரும்பிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளையும் பங்குகொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.