“தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்க முடியாது”

தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்க முடியாது என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நடைமுறையில் நடைமுறைப்படுத்த தவறியமையே தற்போதைய நிலைமைக்கு காரணம் என கூறினார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், மின்சார உற்பத்திக்கு எரிபொருள் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கூறியுள்ளார்.

இருப்பினும் தொடர்ந்தும் மின்சாரம் வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்க முடியாது என மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

தற்போதைய நிலைமைக்கு எவரையும் குறை கூற முடியாது என்றும் இந்த விடயம் தொடர்பான வேலைத்திட்டத்தை வகுக்கத் தவறியதன் விளைவே இது என்றும் அவர் குறிப்பிட்டார்.

2030 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி 70 சதவீதமாக அதிகரிக்கப்படும் என அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதாக அமைச்சர் அமரவீர தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *