
சிரியாவில் அமெரிக்காவின் ஆதரவு பெற்ற குர்திஷ் படைகள் மற்றும் isil தீவிரவாதிகள் இடையே தொடர்ந்து தாக்குதல்கள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் நேற்றைய தினம் சிரியாவின் சிறைச்சாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 120 க்கு மேற்பட்ட நபர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என அறியப்பட்டுள்ளது.
இதில் 77 isil அமைப்பு உறுப்பினர்கள் மற்றும் 39 குர்திஷ் படை வீரர்கள் உள்ளடங்குவர் என இங்கிலாந்து மனித உரிமைகள் அவதானிப்பு மையம் ஒன்று கூறியுள்ளது.
குர்திஷ் தரப்பில் சிறைச்சாலை காவலர்கள், தீவிரவாத எதிர்ப்பு ஆயுதப்படை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் போன்றவர்கள் இறந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்தத் தாக்குதலை isil அமைப்பு திட்டமிட்டு நடத்தியதாக பிற்பாடு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.