
அரசுக்குள் பிரச்சினை இருந்தாலும் நாடு ஒரு போதும் வீழாது, ஆனால் இன்று அரசும் வீழ்ந்து நாடும் வீழ்ந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடாக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் பல தவறுகள் இடம்பெறுகின்றன. நாங்கள் எங்களுடைய ஆட்சியின் போது பிழைகள் செய்தவர்களை தேடுவதற்கு முயற்சித்தோம். அவ்வாறு தேடியவர்களை இன்று விசாரணைக்கு அழைக்கின்றனர்.
அங்கு ஏசி அறையில் இருந்து கொண்டு இதுவரை ஒன்றையும் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை.
அந்த பணத்திற்கு பால்மா வாங்கி தரலாம், எரிவாயு இல்லை, இரண்டு நாட்களில் மின்சார துண்டிப்பு ஏற்பட உள்ளது. மெழுகுவர்த்தி வாங்கி தரலாம்.
வழமையாக அரசாங்கத்தில் வீழ்ச்சி ஏற்படும். ஆனால் இன்று நாடே வீழ்ச்சியில் உள்ளது. எனவே நமக்கு நாட்டை கட்டி எழுப்ப வேண்டும்.
நேற்று ஜனாதிபதி கூறினார், நெல் சாகுபடி செய்ய முடியாது என்றாலும் பயறு உற்பத்தி செய்யுங்கள் என்று.
நாட்டில் சமநிலை என்பது விவசாயிகள். ஆனால் இங்கு அவர்கள் கால் உடைந்து முடங்கியுள்ளனர். நமது தேசிய ஆகாரம் சோறு, பயறு அல்ல.- என்றார்.
வேறு வழியில்லை – கடைகளின் விளம்பர பலகை மின் விளக்குகளை அணையுங்கள்!