சுந்தர் பிச்சை உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிப்பு!

மத்திய அரசின் பத்ம பூஷன் விருதுகள் 17 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மைக்ரோசொப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, சீரம் நிறுவனத் தலைவர் சைரஸ் பூனவல்லா, பாரத் பயோடெக் நிறுவனர்களான டொக்டர் கிருஷ்ணா மற்றும் சுசித்ரா உள்ளிட்ட 17 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்ட நீரஜ் சோப்ரா, விளையாட்டு வீரர்களான பிரமோத் பகத், வந்தனா கட்டாரியா, பாடகர் சோனு நிகாம் ஆகியோருக்கும் பத்மஹ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை மேற்கு வங்காள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கும் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட  நிலையில் அவர் குறித்த விருதினை நிராகரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *