ஆஸ்திரேலிய ஓபன்: அரைஇறுதிக்கு கோலின்ஸ் முன்னேற்றம்

மெல்போர்ன், ஜனவரி 26:

கிராண்ட்ஸலாம் போட்டி களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை காலை நடந்த பெண்கள் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 27-வது தர வரிசையில் உள்ள டேனிலி கோலின்ஸ் (அமெரிக்கா)- அலிசி கோர்னெட் (பிரான்ஸ்) மோதினார்கள்.

இதில் கோலின்ஸ் 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். 28 வயதான அவர் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் 2-வது முறையாக அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். இதற்கு முன்பு 2019-ல் அரை இறுதி வரை வந்திருந்தார்.

கோலின்ஸ் அரை இறுதியில் இகா சுவாடெக் (போலந்து) அல்லது கனேபியுடன் (எஸ்தோனியா) மோதுகிறார். நாளை நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் முதல்நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா) – மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *