நெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு!

நெதர்லாந்தில் கொரோனா கட்டுபாடுகளை தளர்த்துவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நிபந்தனைகளுடன் மதுபானக் கடைகள், உணவு விடுதிகள், அருங்காட்சியகங்கள், திரையரங்குகள் மற்றும் ஏனைய இடங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று சம்பவங்கள் முன்னர் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கும் நிலையிலேயே நெதர்லாந்து அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நெதர்லாந்தில் 90 வீதமானவர்கள் முழுமையான தடுப்பூசி பெற்றபோதும், 57 வீதமானவர்களே பூஸ்டர் தடுப்பூசி பெறுவதற்கு முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *