
கொழும்பு, ஜனவரி 27:
டொலர் நெருக்கடி காரணமாக இலங்கைக்கு அண்மித்த கடற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு எரிபொருள் தாங்கிகளை விடுவிக்க இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக அரசு மூத்த அதிகாரி கூறுகையில் “இலங்கைக்கு எரிபொருளை தாங்கிவந்த இரண்டு தாங்கிகள் நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கைக்கு அண்மித்த கடற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் மின் நெருக்கடி நிலவும் நிலையில், இந்த எரிபொருள் தாங்கிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரினார். இதன்படி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இதில் தலையிட்டு, இவற்றை விடுவிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார் என்று அவர்கள் தெரிவித்தனர்.