
நீதி அமைச்சின் ஏற்பாட்டில் ‘நீதிக்கான அணுகல்’ நடமாடும் சேவை இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த நடமாடும் சேவை, காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட அரச அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நடமாடும் சேவையில் பல்வேறு திணைக்களங்கள் கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்ட போதும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி அலுவலகம், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு, நீதி அமைச்சின் பிரதி நிதிகள் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு ஆகியவை மாத்திரமே இடம்பெற்றது.
இதன் போது வருகை தந்த மக்கள் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவிடம் சட்ட உதவி ஆலோசனைகளை பெற்றுக் கொண்டதுடன், காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலக பிரதிநிதிகளிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சென்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விவரங்களை பதிவு செய்துள்ளனர்.
குறித்த நடமாடும் சேவையில் நீதி அமைச்சின் பிரதி நிதிகள்,நீதி அமைச்சின் கீழ் உள்ள திணைக்கள அதிகாரிகள்,மாவட்ட செயலக பணியாளர்கள்,கிராம அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.


மாகாணசபை தேர்தலை எதிர்கொண்டு, பலரின் போலி முகங்களை மக்களுக்கு காட்டுவோம்! – கஜேந்திரகுமார்