
ராஜ பக்ஷ குடும்பத்தினர் நாட்டை வீணடிக்க வந்துள்ளனர் என மக்கள் சக்தியின் தொழிற்சங்க தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒரு நாடு ஒரு நீதி என்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சி, நாட்டில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
நீதியை கையிலெடுத்து பல வித தவறுகளை மேற்கொள்கின்றனர்.
இதனால் நம் நாட்டிற்கு ஒரு தவறான பெயரே காணப்படுகிறது.
ராஜபக்ஷ குடும்பத்தினர் நாட்டை வீணடிக்க வந்துள்ளனர்.
காடுகளில் உள்ள நீதி போன்றுதான் காணப்படுகிறது நம் நாடு.
அவர்களிற்கு வேண்டியவாறு அமைச்சர்களை பதவி நீக்கம் செய்கின்றனர் என்றார்.