
நாட்டில் மேலும் 23 போ் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளாா்.
நேற்று (26) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
30 வயதுக்குட்பட்ட பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கொவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 369 ஆகும்.