
கொழும்பு, ஜனவரி 27: பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 64 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியது: பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 64 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் கொவிட் இடைநிலை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தற்போதைய சூழலில், பல்கலைக்கழகத்தை முழுமையாக திறப்பது கடினம். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல், சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்று அவர் தெரிவித்தார்.