ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சலங்கந்தை – ஹட்டன் பிரதான வீதியின் தரவளை பட்டல்கலை பகுதிக்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலியானதுடன், 16 பேர் காயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சலங்கந்தை பகுதியிலிருந்து ஹட்டனில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பயணித்த போது வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.