
இலங்கை மின்சார சபையின் எதிர்காலம் நிலையற்றது என சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான Fitch Ratings தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை அதன் அண்மைய மதிப்பீட்டின் மூலம் எதிர்மறையான நிலைக்கு தரமிறக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியை அடுத்து இலங்கை மின்சார சபையின் 50% மின் உற்பத்தி புதை படிவ எரிபொருளை அடிப்படையாகக் கொண்டமையால், இலங்கை மின்சார சபை பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது.
கடனாளர்களுக்கு கடன்கள் விரைவில் திருப்பிச் செலுத்தப்படும் என்று நம்புவதாகவும், சில கடன்களுக்கு நிதியளிப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் இந் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்தக் குறைப்பு காரணமாக இலங்கை மின்சார சபை வெளிநாட்டு நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களில் சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.