மணிவண்ணன் இல்லையென்றால் – கஜேந்திரமார் அணி காணாமல் போய்விடும்!

மணிவண்ணன் இல்லாமல் அடுத்த தேர்தலில் ,கஜேந்திரகுமார் ,கஜேந்திரன் வெற்றி பெற்று காட்டுங்கள்,உங்கள் பின்னால் மக்கள் வருவார்கள் என அகில இலங்கை மக்கள் எழுச்சி கழகம் தெரிவித்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, அருள் ஜேந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கடந்த நல்லாட்சியில் கூட்டமைப்பு சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தியிருந்தால், இப்போது தீர்வுக்கான வழி கிட்டியிருக்கும்.

அன்று ரணிலை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்தார்கள்.இதனால் ஆட்சியும் இல்லை.மக்களுக்கு தீர்வும் கிடைக்கவில்லை.எம்.பிகளின் பொக்கட்டுகள் மட்டும் நன்றாக நிரம்பியது.இதற்காகவா மக்கள் உங்களை நாடாளுமன்றம் அனுப்பி வைத்தனர்.

அது ஒருபுறம் இருக்கட்டும்.இப்போது கஜேந்திரகுமார் பொன்னம்மபலம் 13 ஆவது திருத்தும் வேண்டாம் என்கிறார்.

அப்போது இவர்களுக்கு என்ன வேண்டும் என்று முதலில் சொல்லுங்கள் என்றால் அதையும் சொல்கிறார்கள் இல்லை.உங்கள் பின்னால் மக்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் மார்பு தட்ட வேண்டாம்.

நீங்கள் பாராளுமன்றம் சென்றது தற்செயலான செயல்.ஆகவே மார்பு தட்ட வேண்டாம்.மணிவண்ணனை நீங்கள் தூக்கி எறிந்தீர்கள்.

அவர் பிழை செய்திருந்தால் அதற்கான தண்டனையை கொடுத்து வைத்திருக்க வேண்டும்.கறிவேப்பிலை போல பயன்படுத்தி விட்டீர்கள்.

அடுத்த தேர்தலில் மணிவண்ணன் இல்லாமல் வெற்றி பெற்று காட்டுங்கள்,உங்கள் சொல்லை நாமும் கேட்போம்.தமிழ் மக்களுக்கு மாறாக தான் அன்று தொடக்கம் இன்று வரை செயற்பட்டு வருகிறீர்கள்.

சிங்கள தலைவர்கள் எதிர் பார்ப்பதை நீங்களே செய்து காட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்.

நீங்கள் எவ்வளவு ஆடியும் வேலை இல்லை.மீண்டும் ரத்தம் சிந்த சொல்கிறீர்களா.அது இனி முடியாது.ஊரோடு ஒத்து ஓடுங்கள்.

ஏனைய கட்சிகளுடன் சில விடயங்களுக்கு என்றாலும் சேர்ந்து நில்லுங்கள்.13 ஆவது திருத்தும் என்றாலும் இப்பொது எமக்கு கிடைக்கட்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *