
சதொச ஊழியர்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டிலிருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும், மூன்று வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில் சதொச நிறுவனத்தில் பணியாற்றும் 153 ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசாங்கத்துக்கு 40 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்குகள் இன்று காலை கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ராகல முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவர்களை விடுவிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில் சதொச நிறுவனத்தில் பதிவாகிய முரண்பாடுகள் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு அமைச்சர் மற்றும் பலருக்கு எதிராக ஐந்து வழக்குகளைத் தாக்கல் செய்தது.
அவர்கள் இதற்கு முன்னர் பல வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
கொழும்பில் அதிகரிக்கும் கொரோனா: பாடசாலைகள் தொடர்பில் வெளியான தகவல்!