
நீதிக்கான அணுகுவழி நடமாடும் சேவை நாளை யாழில் இடம்பெறவுள்ளதாக மாவட்ட அரச அதிபர் க. மகேசன் தெரிவித்தார்
நீதியமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீதிக்கான அணுகுவழி நடமாடும் சேவை யாழ் மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த சேவையை, இம்மாதம் 29,30ம் திகதிகளில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், யாழ்.மாவட்ட செயலகத்தில் 30.01.2022 பிற்பகல் 01.30 மணிக்கு நீதியமைச்சர் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஆகியோரின் பங்குபற்றலுடன் விசேட ஊடக கலந்துரையாடல் நடைபெற உள்ளது.