
நீதிக்கான அணுகுவழி நடமாடும் சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து , யாழில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.
நீதியமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீதிக்கான அணுகுவழி நடமாடும் சேவை, மன்னார், கிளிநொச்சி, முல்லைதீவு, வவுனியா போன்ற இடங்களில் நடத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், யாழில் இன்று இடம்பெற்ற நீதிக்கான அணுகுவழி நடமாடும் சேவைக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த சேவை இம்மாதம் 29,30ம் திகதி வரையில் யாழ் மாவட்டத்தில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நீதி அமைச்சின் நீதிக்கான அணுகல் நடமாடும் சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




