
கொழும்பு, ஜனவரி 29:
நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை 11 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
முன்னதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம், அமைச்சர் சரத் வீரசேகர உள்ளிட்ட 9 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.