
திருகோணமலை – இராவண சேனை அமைப்பின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் நிகழ்வு திருகோணமலை இந்துக்கல்லூரி மைதானத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்றது.
இதன்போது, கலை நிகழ்வுகள், மரபுரிமைச் சின்ன புகைப்படப் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகள், மரபுரிமைச் சின்னகாட்சிப்படுத்தல் உள்ளிட்டவை இடம்பெற்றன.
இவ்தைப்பொங்கல் நிகழ்வில் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

