
நாளாந்த மின்வெட்டை அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கையை பரிசீலிப்பதற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது.
மூன்று அனுமானங்களின் அடிப்படையில் தினமும் இரண்டு முதல் ஒன்பது மணித்தியாலங்களுக்கு இடைப்பட்ட மின்வெட்டுகளை விதிக்க இலங்கை மின்சார சபையால், ஆணைக்குழுவிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது .
கடந்த வாரம் நடைபெற்ற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூட்டத்தில், வல்லுநர்கள் வழங்கிய தரவுகளின் மதிப்பீட்டைத் தொடர்ந்து தினசரி மின்வெட்டுகளை விதிக்க அனுமதி வழங்குவதில்லையென முடிவு செய்யப்பட்டது.
ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, தற்போது தினசரி மின்வெட்டு தேவையில்லை என நம்புவதாக தெரிவித்தார்.
இருப்பினும் இன்றைய கூட்டத்திற்குப் பிறகு உறுதியான அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.
தற்போதுள்ள திறன் அடுத்த மூன்று நாட்களுக்கு மின்சார தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக உள்ளதா என்பதை மதிப்பீடு செய்வதாக ஜானக ரத்நாயக்க குறிப்பிட்டார்.
திட்டமிட்ட மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.