சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு யுவதிக்கு கிடைத்த கௌரவம்!

பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவியை கௌரவிக்கும் நிகழ்வு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கரிப்பட்ட முறிப்பு புதியநகர் கிராமத்தில் நடைபெற்றுள்ளது.

இந் நிகழ்வு நேற்றைய தினம் முல்லைத்தீவு புதியநகர் புதியசூரியன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையில் நடைபெற்ற 2வது சவேட் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணிசார்பில் பங்கேற்ற முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவி என்ற யுவதி பெண்களுக்கான 25 வயதுக்குட்ப்பட்ட50-55 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டு தங்கப்பதக்கத்தை வென்றார்.

யுவதியினை கௌரவிக்கும் நோக்கில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்றினை ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது.

யுவதியின் வீட்டில் இருந்து விருந்தினர்கள் பாடசாலை மாணவர்களின் பான்ட் வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். கிராமத்தில் இருந்து திறமையினை வெளிக்காட்டிய மாணவிக்கு பலர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளதுடன் விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளார்கள்.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் சிறப்பு விருந்தினராக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பரமோதயன் ஜெயராணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *