
நாட்டின் சில ஊடகங்கள் ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலின் உண்மையை மக்களுக்கு வெளியிடுவதில்லை என கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வார இறுதியில் கருத்து வெளியிடும்போதே பேராயர் இவ்வாறு தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருக்கும் மறைக்கப்பட்ட உண்மையை ஊடகங்கள் நாட்டுக்கு வெளியிட வேண்டும்.
சில ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு தேவையான விதத்தில் தமது ஊடகங்களை கையாண்டு வருகின்றன.
எனினும், ஈஸ்டர் தாக்குதலின் உண்மை வெளிவரும் நாளில் இந்த ஊடகங்கள் அழிந்து போகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். பல்கலை கிளிநொச்சி வளாகத்தில் கார்பெற் வீதி அமைக்கும் பணி ஆரம்பம்!