மரம் வெட்டும் இயந்திரத்தால் இரு கால்களையும் வெட்டிய நபர்; அதிர வைக்கும் பின்னணி!

இருவருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவரின் இரு கால்களையும் மரம் வெட்டும் இயந்திரத்தினால் வெட்டியதில் குறித்த நபர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹாங்கொட பிரதேசத்தில் நேற்றைய தினம் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பொஹோலியத்த – கலகெதர பகுதியைச் சேர்ந்த 32 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *