
தமது அரச பணிக்கு இடையூறு விளைவித்ததாக தாழ்வுபாடு மீனவர்களிற்கு எதிராக கடற்படையினர் முறைப்பாடொன்றை செய்துள்ளனர்.
மன்னார் தாழ்பாட்டில் சுருக்கு வலை பயன்படுத்திய குற்றச் சாட்டில் கடற்படையினரால் கைது செய்து முகாமிற்கு கொண்டு சென்ற 7 படகுகளையும் 30 சந்தேக நபர்களையும் 200ற்கும் மேற்பட்டோர் கடற்படை முகாமிற்குள் புகுந்து கொண்டு சென்றதாக கடற்படையினரால் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாக சான்றுப் பொருடகள் சகிதம் 7 படகினையும் அதில் இருந்த 30 மீனவர்களையும் அவர்களால் பிடிக்கப்பட்ட மீனையும் கடலில் கைப்பற்றி நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்காக கடற்படை முகாமில் கொண்டு வந்து வைத்திருந்த சமயம், திங்கட் கிழமை 3 மணியளவில் பெண்களும் ஆண்களுமாக கடற்படை முகாமிற்குள் புகுந்து அத்துமீறி அவற்றை கொண்டு சென்று தமது அரச பணிக்கு இடையூறு விளைவித்தனர் என கடற்படையினர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இதேநேரம் குறித்த சம்பவத்துன்போது மாவட்ட நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளும், கடற்படை முகாமில் நின்றதனால் அவர்களே குறித்த சம்பவத்தின் சாட்சிகள் எனப் பதியப்பட்டுள்ளது.