
நாட்டில் உரத்துக்கான தட்டுப்பாடு இல்லை, யார் வேண்டுமானாலும் நாட்டுக்கு உரத்தை இறக்குமதி செய்ய முடியும் என இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
உலக சந்தையில் கொரோனா வைரஸால் உரத்தின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.
எதிர்காலத்தில் இதில் மாற்றங்கள் ஏற்பட்டு உரத்தின் விலை குறைவடையும்.
விவசாயிகளுக்கு தேவையான தரமான உரத்தைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
எவ்வாறாயினும் மக்கள் உரத்துக்கான விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
எனவே உரத்தின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.