கொழும்பு துறைமுகத்தில் விரைவில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடப்பதாக விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெயிண்ட் தயாரிப்புக்காக அனுப்பப்பட்ட பொருட்களே இவ்வாறு தேங்கிக்கிடப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பொருட்கள் மிகவும் எரியக் கூடியவை மற்றும் தீவிர வெப்ப நிலையில் நீண்ட நேரம் வைத்திருக்கக்கூடாது.
இந்த பொருட்கள் 2448 மணி நேரத்தில் அகற்றப்பட வேண்டும். எனினும், அவை சுமார் எட்டு வாரங்களாக துறைமுகத்தில் தேங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
