
கொழும்பு, பெப் 1: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனாவின் மகனுமான பிரதீப் ஜயவர்தன மீது இன்னொரு மாநகரசபை உறுப்பினர் மிளகாய் பொடி தூவி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதீப் ஜயவர்தன கூறுகையில் “சசுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நிலைக்குழுவின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவரை நான் தோற்கடித்தேன். இதைத் தொடர்ந்து தோற்கடிக்கப்பட்ட உறுப்பினரின் மகளும், கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான பெண் மீது மிளகாய்ப் பொடி வீசித் தாக்கினார்.
இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளேன். அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேனாநாயக்கவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.