
‘இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள்’ எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 4 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் முன்னெடுக்கவுள்ள மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.
குறித்த போராட்டத்தில் அனைவரையும் பங்குகொள்ளுமாறு முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுஃ
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரேழுச்சி இயக்க இணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல்வருமான தவத்திரு வேலன் சுவாமிகள், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க உப செயலாளர் இரதீஸ்வரன் சபிதா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு குறித்த அழைப்பை விடுத்தனர்.