
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள்ள வீதி மறியல் போராட்டம் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.
இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலைக் கண்டித்தும் வத்திராயன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 2 மீனவர்களுக்கு நீதி கோரியும் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்த போராட்டத்திற்கு பல தரப்பினரும் தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் குறித்த போராட்டத்திற்கு நேற்றைய தினம் இரவு (2) சென்று ஆதரவளித்துள்ளார்.



