
மயிலிட்டி – கட்டுவன் பிரதான வீதியை திறந்து வைக்குமாறு கோரி அப்பிரதேச மக்கள் தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தெல்லிப்பழை பிரதேச செயலருக்கு கடிதம் ஒன்றினையும் வழங்கி வைத்தனர்.
அக் கடிதத்தில்,
மயிலிட்டி – கட்டுவன் வீதி புனரமைக்கப்பட்டு சிறியளவு தூரம் புனரமைக்கப்படாமல் உள்ளது.
இடம்பெயர்ந்து 35 ஆண்டுகளின் பின்னர் தற்போது எமது சொந்த ஊரான மயிலிட்டியில் வசித்து வருகின்றோம்.
மயிலிட்டி – கட்டுவன் பிரதான வீதி புனரமைக்கப்பட்டு வந்த நிலையில் 400 மீட்டர் தூரம் வரை தற்போது புனரமைக்கப்படாது உள்ளது.
ஏனெனில் தேவையின் நிமித்தம் தெல்லிப்பழை, யாழ்ப்பாணம், மல்லாகம், சுன்னாகம் போன்ற இடங்களுக்கு செல்லும் பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் அரச ஊழியர்கள்கள் இவ் வீதியானது புனரமைக்காததால் பல இன்னல்களை எதிர் கொள்கின்றனர்.
இவ்விதி புனரமைக்கப்படாததால் வேறு வீதியால் மூன்று கிலோமீட்டர்கள் தூரம் சுற்றியே மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.
எனவே நமது நிலையை கருத்தில் கொண்டு இதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம் – என்றுள்ளது.


