197 கைதிகளுக்கு பொது மன்னிப்பு: ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இல்லை

கொழும்பு, பெப் 3: நாட்டின், 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 197 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கவுள்ளார். ஆனால், இந்தப் பட்டியலில் முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவின் பெயர் இடம்பெறவில்லை.

இது தொடர்பாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க கூறுகையில்

“சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதியால் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 197 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது. அதன்படி, மஹர சிறைச்சாலையில் உள்ள 20 கைதிகள், கேகாலை சிறைச்சாலையில் உள்ள 18 கைதிகள், வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள 17 கைதிகள்,களுத்துறை சிறைச்சாலையில் உள்ள 13 கைதிகள், போகம்பரா சிறைச்சாலையில் உள்ள 11 கைதிகள், மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள 11 கைதிகள், வாரியபொல சிறைச்சாலையில் உள்ள 10 கைதிகளுக்கு சுதந்திர தினம் கொண்டாடப்படும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கவுள்ளார்’ என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *