கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா!

கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா!

கல்முனை மாநகர் அருள்மிகு ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா நாளை மருதினம் ஆறாம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

இதனையொட்டி, 5ஆம் திகதி சனிக்கிழமை, மாலை 6 மணிக்கு மூர்த்திக்கு பூர்வாங்க கிரிகைகள் ஆரம்பமாகும்.
தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இவ்வாலய உற்சவம்,எதிர்வரும் 17ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெறும்.
இந்த உற்சவ காலத்தில் 12 நாட்களும் காலை – ஸ்நபன பூஜை,யாக பூஜை, நித்திய பூஜை, தம்ப பூஜை,வசந்த மண்டப பூஜை என்பன 8.30 மணி வரை இடம்பெறும்.
மாலை 5 மணிக்கு யாக பூஜை,நித்திய பூஜை, தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை, சுவாமி உள்வீதி- வெளிவீதி உலா வரல் இடம்பெறும்.
அதே நேரம், தினமும் இரவு ஆறு மணி தொடக்கம் 6.30 வரையும் கல்முனை-03 பண்ணிசை மன்றத்தின் கூட்டுப் பிரார்த்தனையும், இரவு 6 30 தொடக்கம் 7 மணி வரை, கல்முனை ஸ்ரீ சத்திய சாயி நிலையத்தினரின், தெய்வீக பேருரை இடம்பெறும்.
ஒன்பதாம் நாள் வேட்டை திருவிழாவும் பத்தாம் நாள் தெப்பத் திருவிழாவும் நடைபெற்று 11 ஆம் நாள் முத்துச்சப்பர பவனி இடம்பெறும்.
சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்திவிநாயகர் ஆலயம், கிழக்கிலங்கையில் மிகவும் பழமை வாய்ந்த ஆலயங்களில் பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும்.
வன்செயல்களின் போது பல தடவைகள் இடித்து அளிக்கப்பட்ட இந்த ஆலயம், இந்தப் பிரதேசத்து மக்களால், புனரமைக்கப்பட்டு எழில் மிகு தோற்றத்தில் காட்சியளிக்கிறது.
கொடியேற்றத் திருவிழா அன்று கல்முனை 3 திருத்தொண்டர் படையினர் நடத்தும் அன்னதானம் இடம்பெறும்.
தீர்த்தோற்சவ தினமான எதிர்வரும் 17ஆம் திகதி , கல்முனை இராவணா விளையாட்டுக்கழகம் நடத்தும் மாபெரும் அன்னதானம் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *