
கொழும்பு, பெப் 4: இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்.
இச்சிறப்பு பூஜை வழிபாடுகள் புத்தசாசன மத விவகாரங்களுக்கான அமைச்சின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகரும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இந்துமத விவகாரங்களுக்கான இணைப்பாளருமான இராமச்சந்திரக் குருக்கள் பாபு சர்மாவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.