ரயில் சேவைகளின் முடக்கம் தொடர்பில் இலங்கை புகையிரத சங்கம் நடவடிக்கை

தினசரி ரயில் கட்டுப்பாட்டு சேவைகளை தற்காலிகமாக சமாளிக்க, இலங்கை புகையிரத சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புகையிரத அதிகாரிகளின் ஒழுங்குமுறைக் கடமைகளை ஈடுகட்டுதல் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் திடீரென நோய்வாய்ப்படுவதாலும் ரயில் சேவைகள் முடங்கப்படுகின்றன.

இதனை தடுக்க சிறந்த ரயில் சேவையை வழங்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக இலங்கை புகையிரத சங்க தலைமைச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், தினசரி அலுவலக ரயில் பயணங்களை ரத்து செய்வதனால்,
அலுவலக பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் அதிகாரிகள் உட்பட பலர் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

இச் சிரமத்திற்கு ஒரு தீர்வாக தற்போதைய நிலைமை குறித்து மேலதிக ஆய்வுக்குப் பின்னர், உரிய அதிகாரிகள் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மற்றும் புகையிரத நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புகையிரத துறை வீணாக இயங்குவதைத் தற்காலிகமாகத் தடுக்கவும் இது உதவும்- என்றார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரும் கையெழுத்து போராட்டம்; ஊடகவியலாளரின் மகளும் பங்கேற்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *